கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீரமைக்க நடவடிக்கை!! -டக்ளஸின் கோரிக்கைக்கு இணங்கிய நாமல்-

ஆசிரியர் - Editor II
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீரமைக்க நடவடிக்கை!! -டக்ளஸின் கோரிக்கைக்கு இணங்கிய நாமல்-

கிளிநொச்சியில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கை பொறுப்பேற்று சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பணிப்பின் பேரில், கிளிநொச்சி விளையாட்டரங்க புனரமைப்புப் பணிகளுக்கென நியமிக்கப்பட்ட இணைப்பாளர் பிரயந்த இலங்கசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வரும் யுத்கோர்ப் வட மாகாணப் பணிப்பாளர் சந்தானாத் ஆகியோர் கடந்த 4 ஆம் திகதி குறித்த விளையாட்டரங்கிற்கு நேரில் வருகை சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்தனர்.

இதன்போது, உள்ளக விளையாட்டரங்கு, பரந்த பார்வையாளர் கூடத்துடன் கூடிய திறந்தவெளி அரங்கு, சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் என்பவற்றைக் கொண்ட இந்த விளையாட்டரங்கில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பிரதிநிதிகளுக்கு இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.


Radio