கங்குலிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது!! -நாளை வீடு திரும்புவார்-
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி சிகிச்சையை முடித்துக் கொண்டு நாளை வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், கங்குலி நாளை சிகிச்சையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்று வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.