வெள்ளை ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம்!! -தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நடராஜன்-

டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.