பண்டிகை காலத்தில் பெருமளவு மக்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற்றம்..! அடுத்தவரும் சில நாட்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து..
இலங்கையில் அடுத்துவரும் சில நாட்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோஹண கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரசபை பிரிவிற்குள் கொரோனா பரவல் ஒரளவு குறைவடைந்துள்ளது எனினும் களுத்துறை பேருவளை பொல்காவல மொனராகல திருகோணமலை காத்தாண்குடி மட்டக்களப்பு போன்ற பகுதிகளில்
நிலைமை மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மேல்மாகாணத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் புதிய பரவல்கள் ஆரம்பமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.