SuperTopAds

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன்!! -அடுத்த போட்டியில் விளையாடுவார்-

ஆசிரியர் - Editor II
இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன்!! -அடுத்த போட்டியில் விளையாடுவார்-

அவுஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிற்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஸ் யாதவ் காலில் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் போட்டியின் நடவில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் பந்துவீச வரவில்லை. இந்த நிலையில் காயம் காரணமாக உமேஸ் யாதவ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.