மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது..! மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராக உள்ளேன். 

என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி மோசடி செய்துள்ளதாக எனக்கும் முறைப்பாடுகள் வந்திருக்கின்றன,

இந்நிலையில் நிலையில் பாதிக்கப்பட்டவர் முன்வந்தால் வழக்கு தொடர நான் தயாராக இருக்கிறேன். மாநகர சபையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் எனக்கும் முறைப்பாடு கிடைத்தது. 

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் மாநகரசபை நிதி வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே முதல்வராக இது குறித்து என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. 

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். மேலும் என்னோடு இல்லாத தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களை என்னோடு சேர்த்துக்கொள்ள முடியும். 

ஆனால் இருவரை என்னால் சேர்த்துக்கொள்ள முடியாது. காரணம் ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர், மற்றயவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவர். 

எனவே இவ்வாறானவர்களுக்கு என்னுடன் இருக்க தகுதியில்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு