அணிக்கு திரும்பும் வார்னர்!! -இறுதி இரு டேஸ்டிலும் விளையாடுவார்-
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக அவுஸ்திலேலிய அணியில் வார்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
2 ஆவது டெஸ்டில் தோல்வி அடைந்ததால் அவுஸ்திலேலிய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு நாள் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் இரு டெஸ்டில் விளையாடவில்லை.
இந்த நிலையில் கடைசி இரு டெஸ்டுக்கான அவுஸ்திலேலிய அணியில் 34 வயதான வார்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.