அவுஸ்திரேலியா வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிக் கொண்ட 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்டும் இந்த டெஸ்ட் போட்டியில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவை விட 131 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
131 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், 4 ஆம் நாள் ஆட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, 70 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் {க்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
5 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 19 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்துவந்த அணித்தலைவர் ரஹானே , {க்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 15.5 ஓவரில் 70 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.