ஐ.சி.சியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது தோனிக்கு!!
ஐ.சி.சி வழங்கும் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் சிறப்பு விருதை மகேந்திர சிங் தோனிக்கு வழங்குவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.
2011 நாட்டிங்கமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இயன் பெல் ஓட்டம் எடுக்க முற்பட்ட போது நடந்த ரன் அவுட்டில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் முதலில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.
அப்போது அவர் 137 ஓட்டங்களை எடுத்திருந்தார். இருப்பினும் அவர் மீண்டும் விளையாட அப்போதைய இந்திய அணி தலைவர் தோனியால் அழைக்கப்பட்டார்.
இதனால் தான் பெல் மீண்டும் களமிறங்கினார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைத்தது. அணி தோல்வி அடைந்ததற்கு விமர்சனங்கள் வந்தாலும் அவரின் அணுகுமுறை அந்த சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில் தோனியின் அந்த முடிவுக்கு தற்போது பெரும் விருது கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த கடந்த 10 வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்ற சிறந்த உத்வேக வீரருக்கான விருதை தோனிக்கு வழங்குவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. மேலும் இந்த விருதிற்கு ரசிகர்கள் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.