SuperTopAds

2 ஆவது டெஸ்ட்: 8 விக்கெட்டுகளை இழந்து திணறும் அவுஸ்திரேலிய!!

ஆசிரியர் - Editor II
2 ஆவது டெஸ்ட்: 8 விக்கெட்டுகளை இழந்து திணறும் அவுஸ்திரேலிய!!

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில், 8 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா திணறி வருகிறது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 

இந்தப் போட்டியில் நாணயசுழல்ச்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் முதலில் துடுப்பாட தீர்மானித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தொடங்கியது. 

அவுஸ்திரேலியா அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ஓட்டங்களும், ஸ்டிவன் சுமித் ஓட்டம் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும், மர்னஸ் 48 ஓட்டங்களும் பெற்று வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ஓட்டங்களும், டிம் பெய்ன் 13 ஓட்டங்களும், ஸ்டார்க்  7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியான் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர். 

தற்போது அவுஸ்திரேலியா அணி 68 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் ஆர்.அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும்,  முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.