மாகாண கல்வி அமைச்சருக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை
வடமாகாண கல்வி அமைச்சருக்கு சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. என்னும் சாரப்ப ட வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கூறிய கதை ஒன்றினால் மாகாணசபை அமர்வில் சிரிப் பொலி மேலெழுந்து பின்னர் அது அமைதியாக முடிவடைந்திருந்தது.
வடமாகாணசபையின் 118வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந் தது. இதன்போதே கல்வி அமைச்சருக்காக மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஒரு கதை கூறி னார். அந்த கதை இப்படி இருந்தது.
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தா னாம். அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாளாம். அந்த மகளுக்கு மன்னன் மணமகன் தேடினான். அப்போது மன்னன் தன் அமைச்சர்களை அழைத்து 100 அறிவுள்ள மணமகன் வேண்டும். என கேட்டானாம்.
அதற்கமைய அமைச்சர்களும் 100 அறிவுள்ள மணமகன் தேடி அலைந்து களைத்துபோன நிலையில் மீண்டும் மன்னனிடம் வந்து 100 அறிவுள்ள மணம கனை தேடி பிடிக்க முடியவில்லை. ஆனால் 98 அறிவுள்ள மணமகனை தேடி பிடித்துள்ளோம் என கூறினார்கள். சரிய பரவாயில்லை. 2 அறிவுகள் தானே குறைகிறது.
என கூறிய மன்னன் அமைச்சர்கள் காட்டிய அந்த மணமகனை தனது மகளுக்கு மணம் முடித்து கொடுத்தார். திருமணம் முடிந்த பின்னர் அமைச்சரை அழைத்த மன்னன் மணமகனுக்கு 98 அறிவு உள்ள து. 2 அறிவுதான் குறைகிறது என கூறியிருந்தீர்.
அவரிடம் இல்லாத அந்த 2 அறிவும் என்ன? என வினவினாராம். அதற்கு பதிலளித்த அமைச்சர் சொல் புத்தி, சுய புத்தி ஆகிய இரு அறிவுகளும் மணமகனுக்கு இல்லை என கூறினாராம். அப்படித்தான் இங்கே நிலமை உள்ளது. என கூறினார்.
இதனையடுத்து சிறிதுநேரம் அவையில் சிரிப்பொலி மேலிட்டது. பின்னர் ஒருவாறாக அது அமைதியடைந்தது. குழப்பங்கள் எவயும் இடம்பெறவில்லை.