SuperTopAds

36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா!! -வரலாற்றில் பதிவான சம்பவம்-

ஆசிரியர் - Editor II
36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா!! -வரலாற்றில் பதிவான சம்பவம்-

முதல் டெஸ்டின் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணியை வெறும் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து வரலாற்றில் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த டெஸ்ட் அணி என்ற இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனையடுத்து 53 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அவுஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர். 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் என்ற நிலையில் பரிதாபமான நிலையில் இருந்தது. 79 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. 

தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ஓட்டங்கள் இதுவாகும்.