23 நிமிடங்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!! -முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது-

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இரண்டாது நாளாக இன்று துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதல்நாளான நேற்று வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி வெறும் 23 நிமிடங்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 11 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
தற்போது அவுஸ்திரேலியா அணி தற்போது முதல் இன்னிங்ஸில் துப்பெடுத்தாடி வருகின்றது.