SuperTopAds

ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்ட்!! -முதல்நாளில் இந்திய 6 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள்-

ஆசிரியர் - Editor II
ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்ட்!! -முதல்நாளில் இந்திய 6 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள்-

அவுஸ்ரேலியா - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்ட நிறைவில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் அஸ்வின் 15 ஓட்டங்களுடனும் விருத்திமான சஹா 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இந்தியா அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி சா ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்க, மாயங் அகர்வால் 17 ஓட்டங்களுடனும், செடீஸ்வர் புஜாரா 43 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 74 ஓட்டங்களுடனும், அஜிங்கியா ரஹானோ 42 ஓட்டங்களுடனும், ஹனுமா விஹாரி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட், பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் 2 ஆவது நாளுக்காகவும் நாளை வெள்ளிக்கிழமை இந்தியா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.