லங்கா பிறீமியர் லீக் வரலாற்று வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்..

ஆசிரியர் - Editor II
லங்கா பிறீமியர் லீக் வரலாற்று வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்..

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 ஆண்டுக்கான கிண்ணத்தை வென்று ஜப்னா (யாழ்ப்பாம்) ஸ்டேலியன்ஸ் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. 

7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டியில் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணியும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதில் அதிகப்படியாக சொயிப் மலிக் 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்றார். மேலும் அணித்தலைவர் திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 14 பந்துகளில் 2 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளையும் விளாசி 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

காலி கிளேடியேட்டர்ஸ் அணி சார்பில் தனஞ்செய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 

189 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. 

தொடக்க வீரர்கள் இரட்டை ஓட்டங்களை பெறாமலேயே ஆட்டமிழந்தனர். அதிகபடியாக அணித்தலைவர் பானுக்க ராஜபக்ச 17 பந்துகளில் 4 சிக்ஸர்களும், 3 பவுண்டறிகளையும் விளாசி 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

மறுமுனையில் அஸாம் கிஸன் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களும், ஒரு பவுண்டறிகளும் அடங்கலாக 36 ஓட்டங்களை பெற்றார். 

இருப்பினும் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை அவர்களால் எதிர் கொண்டு நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை.

இந்நிலையில் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களையே அவர்களால் பெறமுடிந்தது. 

இதன்படி லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 போட்டித் தொடரின் முதல் ஆண்டு போட்டியை வென்ற ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு