பரந்தனில் ஹயஸ் வான் தடம்புரண்டு நான்கு பேர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
பரந்தனில் ஹயஸ் வான் தடம்புரண்டு நான்கு பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் - பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.