SuperTopAds

உடல்தகுதியை நிரூபித்த ரோகித்!! -டெஸ்டில் விளையாய அவுஸ்திரேலியா புறப்பட்டார்-

ஆசிரியர் - Editor II
உடல்தகுதியை நிரூபித்த ரோகித்!! -டெஸ்டில் விளையாய அவுஸ்திரேலியா புறப்பட்டார்-

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உடல்தகுதியை நிரூபித்த நிலையில் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக புறப்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது இடதுகால் தொடையில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டது. 

இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதன் இயக்குனர் ராகுல் டிராவிட் முன்னிலையில் நேற்று இறுதிகட்ட உடல்தகுதி சோதனை நடந்தது. 

இந்த சோதனையில் அவர் தேறினார். தற்போது உடலில் எந்த பிரச்சினையும் இன்றி சவுகரியமாக இருப்பதாக கூறினார். அகாடமி மருத்துவரும் இதை உறுதிப்படுத்தினார்.

ரோகித் சர்மா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதற்கான உடல்தகுதி சான்றிதழை தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. 

இதையடுத்து ரோகித் சர்மா உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார். விமானம் மூலம் மும்பையில் இருந்து துபாய் செல்லும் ரோகித் சர்மா அங்கிருந்து நாளை சிட்னிக்கு செல்லுகின்றார். 

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின்படி ரோகித் சர்மா அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைப்படுத்தும் நடைமுறையை முடித்த பின்Nனு பயிற்சியை தொடங்க அனுமதிக்கப்படுவார்.