மருதனார்மடம் கொரோனா தொற்றாளருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி..? திணறும் சுகாதார பிரிவு, 394 போிடம் இன்று மட்டும் பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சந்தை வியாபாரிகள் 394 பேரிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளது. 

மேலும் மருதனார்மடம் சந்தையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

எழுமாற்றான பி.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு 

கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. இந் நிலையில் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 

394 பேரிடம் இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள்பெறப்பட்டுள்ளன. இவ் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா 

என்பதனை அறியமுடியும்.மேலும் இன்று மிக குறைந்தளவிலான மக்களே சந்தைக்கு வருகைதந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். 

அவரோடு தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு