யாழ்.மாவட்டத்தில் கோவில்கள், விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு..! திருமணம், தனியார் கல்வி நிலையங்கள் இயங்க தடை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது குறித்து யாழ்.மாவட்ட செயலர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தில் 874 குடும்பங்களை சேர்ந்த 1905 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அக்டோபர் - நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் முற்பகுதிவரை 

26 கொரோனா தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர். 

இந்நிலையில் மாவட்ட சுகாதார பிரிவுக்கு கொரோனா தடுப்பு செயலணி வழங்கிய உத்தரவுக்கு அமைவாக ஆலயங்களில் 50 பேர் வரையில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

மேலும் விடுதிகள் மற்றும் கலியாண மண்டபங்களில் பயிற்சி பட்டறைகள், கலந்துரையாடல்கள் நடத்த அனுமதிக்கப்படுகின்றது. அங்கும் 50 பேர் அனுமதிக்கப்படுவதுடன், 

வரவு பதிவேடு மற்றும் சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் திருமண மண்டபங்கள், விடுதிகளில் 

திருமணங்கள் மற்றும் விழாக்களை நடத்த அனுமதி இல்லை. அவை வீடுகளிலேயே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படவேண்டும். 

அதேபோல் தனியார் கல்வி நிலையங்களை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அலுவலக கடமையின் நிமித்தம் வேறு மாகாணங்களுக்கு செல்லும் அரச ஊழியர்கள் 

மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நபர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை. ஆனால் அவர்கள் அலுவலக பணி அல்லது அத்தியாவசிய பணிக்காகவே சென்றனர் 

என்பதை உறுதிப்படுத்தவேண்டும். என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு