இத்தாலிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த பாலோ ரோஸ் மரணம்!!

கால்பந்து உலக கோப்பையை இத்தாலிக்கு வென்று கொடுத்த அந் நாட்டின் கால்பந்து அணி வீரர் மரணம் அடைந்தார்.
1982 ஆம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இத்தாலி கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் பாலோ ரோஸ்சி. அந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்ற பாலோ ரோஸ்சி பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்ததும் அடங்கும்.
சர்வதேச போட்டிகளில் இத்தாலி அணிக்காக 20 கோல்கள் அடித்து இருக்கும் அவர் கிளப் போட்டிகளில் 134 கோல்களும் அடித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றி வந்த பாலோ ரோஸ்சி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் 64 வயதான பாலோ ரோஸ்சி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.