SuperTopAds

3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்!! -முதல் இடத்திற்கு முன்னேறிய தம்புள்ளை வைக்கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II

லங்கா பிரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரில் முதல் நிலையில் இருந்து திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஏல்.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தில் இருந்தது. 

இருப்பினும் இறுதியாக அந்த அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தேல்வியடைந்த நிலையில் தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

3 ஆவது இடத்தில் இருந்த தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 ஆம் இடத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் தொடர்ந்து நீடித்து வருகின்றது.