SuperTopAds

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சை வைச்சு செய்த கொழும்பு கிங்ஸ்!!

ஆசிரியர் - Editor II

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இன்று நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. 

இன்று திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. 

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எல்.ஜே.இவன்ஸ் 65 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களை பெற்றார். 

174 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.