யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சை வீழ்த்தி வெற்றி பெற்ற கண்டி டஸ்கர்ஸ்!!

லங்கா பிறீமியர் லீக் ரி-20 தொடரில் இன்று புதன்கிழமை நடந்த போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.
இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.
இப் போட்டி ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் 20 ஓவர் முடிவில் 150 ஓட்டங்களை பெற்றது.
இதில் மலிக் 44 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றார். மற்றும் யாழ்ப்பாணத்து வீரரான விஜாஸ்காந் ஒரு பவுண்டரியுடன் 8 ஓட்டங்களை பெற்றார்.
151 ஓட்டங்களை பெற்றால் வெற்ற என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை தொட்டது.