தன்னுடைய வீட்டு வளவுக்குள் இருந்து வெள்ளத்தை வெளியேற்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான காப்பெற் வீதியை சேதப்படுத்திய யாழ்.சாவகச்சோி நகரசபை உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I

பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட காப்பெற் வீதியை சேதமாக்கி வாய்க்கால் அமைத்த சாவகச்சோி நகரசபை உறுப்பினர்கள் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சாவகச்சோி நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது வீட்டு வளவுக்குள் தேங்கியிருந்த வெள்ளத்தை வெளியேற்றுவதற்காகவே குறித்த பிரதேசசபை உறுப்பினரும், வேறு சில உறுப்பினர்களும் இணைந்து 

காப்பெற் வீதியை குறுக்காக தோண்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. அண்மையில் பெய்த கடும் மழையினால் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

குறித்த உறுப்பினர் வீட்டிலும் சிறிதளவு வெள்ளம் நின்றுள்ளது. இதனால் நேற்று இரவு நகரசபை உறுப்பினர்  அடாவடியாக காப்பற் வீதியினை குறுக்காக வெட்டியுள்ளார். 

உறுப்பினர் காப்பற் வீதியை வெட்டி சேதமாக்குவதை அவதானித்த குறித்த வீதியில் இருக்கும் மக்கள் இவ்வாறு வெட்டினால் வீதி மோசமாக சேதமாகிவிடும் என அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால் இதனை செவமடுக்காமல் தான்தோன்றித்தனமாக காப்பற் வீதியினை வெட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனிடம் வினவியபோது 

நகரசபைக்கு சொந்தமான வீதியினை எவ்வித அனுமதியும் இன்றி அடாத்தாக வெட்டி குறித்த உறுப்பினர் சேதமாக்கியுள்ளார். 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலரும் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். 

எனவே குறித்த உறுப்பினர் மீது பொதுச்சொத்துக்களை சேதமாக்கல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார். 

கடுமையான மழைவெள்ளத்தில் பொதுமக்களே இருக்கின்ற போது சிறிதளவு வெள்ளத்தினை அகற்றுவதற்கு பலகோடி பெறுமதியான காப்பற் வீதியைனை வெட்டி சேதமாக்கிய 

உறுப்பினரின் அடாவடியை தென்மராட்சியின் புத்தியீவிகள் பலரும் விமர்சித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு