லங்கு பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடர்!! -யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்-

2020 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவின்றது.
ஏல்.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இதுவரை ஜந்து போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகளில் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் ஆறு போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் ஜந்து போட்டிகளில் விளையாடி, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆவது இடத்தில் உள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இந்நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி இரு இடங்களிலும் உள்ள கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளில் எது நான்காவது அணியாக அரையிறுதிக்கு நுழையும் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.