“புரவி” புயல் தாக்கியபோது யாழ்.சாவகச்சோியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை..! பெண் உட்பட 3 பேர் சிக்கினர், நகை, பணம் மீட்பு..

ஆசிரியர் - Editor I

“புரவி” புயல் தாக்கம் இடம்பெற்றபோது யாழ்.சாவகச்சோி - கல்வயல் மற்றும் மட்டுவில் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியை சேர்ந்த இருவர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 7 பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம் ஹெரோயின், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2ம் திகதி இரவு புரவி புயல் தாக்கம் இடம்பெற்றபோது கல்வயல் மற்றும் மட்டுவில் பகுதியில் அடுத்தடுத்து 7 வீடுகளை உடைத்து

5 பேர் கொண்ட கும்பலினால் தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில்

பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் தலமையிலான பொலிஸ் பிரிவு மேற்கொண்டிருந்த துரித விசாரணைகளின் அடிப்படையில் அளவெட்டி மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 

திருட்டு நகைகளை வாங்கிக பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கொள்ளையர்களிடமிருந்து சுமார் 7 பவுண் நகை, 30 ஆயிரம் பணம், 2 கிராம் ஹெரோயின், 3 மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு