2350 மில்லியன் செலவில் யாழ்.மாநகரசபை மற்றும் நகர மண்ட கட்டுமான பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகிறது..!

ஆசிரியர் - Editor I

புதிய யாழ்.மாநகரசபை மற்றும் நகர மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் 2019ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், 

தற்போது துரிதகதியில் இடம்பெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படுகிறது. உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் 

நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க ஊடாக ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு