நடராஜன், சகால் மிரட்டல் பந்துவீச்சு!! -அவுஸ்திரேலியாவை மண்டியிட வைத்த இந்தியா-
முதல் ரி-20 போட்டியில் அவுதிரேலியா அணியை 11 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அவுதிரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா – அவுதிரேலியா இடையிலான முதலாவது ரி-20 போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது. நாணயசுழல்ச்சில் வென்ற அவுதிரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் கே.எல்.ராகுல், சிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, அணித்தலைவர் கோலி 9 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் பந்துகளை அடித்து ஆடிய கே.எல். ராகுல் 37 பந்தில் அரைசதம் அடித்தார்.
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் சடுதியாக உயர்ந்தது. ஆனால் அவர் 15 பந்தில் 23 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். கே.எல் ராகுல் 51 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஸ் பாண்டே 2 ஓட்டத்துடுனும், ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டத்துடனும் வெளியேறினார்.
இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை அப்படியே குறைய ஆரம்பித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.1 ஓவரில் 86 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன்பின் 16.5 ஓவரில் 114 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.
கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 47 ஓட்டங்களை விளாச, இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை குவித்துள்ளது.
162 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அவுதிரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திரடியாக ஆடினர். இருப்பினும் அவர்களால் களத்தில் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை.
இந்நிலையில் அவுதிரேலியா அணி சார்பாக சொட்ஸ் 34 ஓட்டங்களையும், பின்ஸ் 35 ஓட்டங்களையும், கொன்றிகுயிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சகார் 3 விக்கெட்டுக்களையும், நடராஜன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அவுதிரேலியா அணி முதல் ரி-20 போட்டியில் இந்திய அணியிடம் 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.