தேன் எடுத்து தருவதாக கூறி 11 வயது சிறுமியை காட்டுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்த 78 வயதான முதியவர் கைது..!

ஆசிரியர் - Editor I

காட்டில் தேன் எடுத்து தருவதாக சிறுமியை ஏமாற்றி காட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த 78 வயதான முதியவரை 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி ரி,யோகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். 

மட்டக்களப்ப கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த 11 சிறுமியை சம்பவ தினமான கடந்த 28 ஆம் திகதி சிறுமியின் உறவினரான 78 வயதான சந்தேக நபர் காட்டில் தேன் எடுத்துத் தருவதாகக் கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டபோது 

அந்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் இதனைக் கண்டு சிறுமியின் பொற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் 29 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரான 78 வயதுடைய உறவினரைக் 

கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தடுத்தியபோது 

அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Radio