புயல் அபாயம்..! கிழக்கு பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை, வடக்கு பாடசாலைகளுக்கு இல்லையா..? வடக்கு மாகாணத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த பிரதேசம் அடுத்த சில மணித்தியாலங்களில் காற்றழுத்த தாழமுக்கமாக விருத்தியடையகூடிய சாத்தியங்கள் காணப்படுவதுடன் 12 மணித்தியாலங்களின் பின்னர் பாரிய சூறாவளியாக விருத்தியடையவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும்

வளிமண்டலவியல் திணைக்களம் 2ம், 3ம் திகதிகளுக்கு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் 

இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கிணங்க, அடுத்த சில நாட்களுக்கு வட அகலாங்குகள் 05N - 12N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 82N – 92N இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, 

சடுதியாக அதிகரிக்கும் காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் (05N – 12N, 82E – 92E) கடலில் பயணம் செய்வோரும் 

மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந் நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் மேற்கண்ட திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக 

மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். எனினும் வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளபோதும் வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு