மைதானத்தில் காதல்!! -இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்-

ஆசிரியர் - Editor II
மைதானத்தில் காதல்!! -இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்-

இந்தியா - ஆஸ்திரேலியா 2 அவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய இளைஞரும் ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் தங்களது காதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது

இதையடுத்து 2 ஆவது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதன் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். 

இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன்,அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு