வடகிழக்கு மாகாணங்களில் போர் காலத்தைபோல் பெருமளவில் குவிக்கப்பட்ட படையினர் மற்றும் பொலிஸார்..! கெடுபிடிகளுக்கும் பஞ்சமில்லை..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் போர் காலத்தைபோல் பெருமளவில் குவிக்கப்பட்ட படையினர் மற்றும் பொலிஸார்..! கெடுபிடிகளுக்கும் பஞ்சமில்லை..

வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாளை முன்னிட்டு பெருமளவு இராணுவம் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு துயிலும் இல்ல வீதிகளும் தடைசெய்யப்பட்டிருந்தமையினை அவதானிக்ககூடியதாக இருந்தது. 

அதேபோல் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

மேலும் வீடுகளில் மாவீரர்களுக்கான அஞ்சலிகளை செலுத்திய மக்களும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக பல பெண்களை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு