யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..?

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே 

சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது.இவ்வாறான நிலையில் விமான ரிக்கெட் விலையை குறைக்காதது, 

பயணிகளின் பொதிகள் ( passenger luggage) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறிவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்றுமாறு 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை முதவீடு செய்யவில்லை என்று 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio