கிளிநொச்சி நகரில் அடுத்தடுத்து 14 கடைகள் உடைத்துத் திருட்டு -முறையிட்டும் பயனில்லை: வர்த்தகர்கள் விசனம்-

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி நகரில் அடுத்தடுத்து 14 கடைகள் உடைத்துத் திருட்டு -முறையிட்டும் பயனில்லை: வர்த்தகர்கள் விசனம்-

கிளிநொச்சி நகரில் அண்மைக்காலத்தில் மட்டும் இரவுவேளைகளில் 14 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இவ்வாறான தொடர் திருட்டுக்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் ஒருவர் கூட பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுச்சந்தைக்குள்ளும், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் திருட்டுச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. 

இந்த திருட்டுச்சம்பவங்களை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் எமக்கு கூறுகின்றனர். எனினும் 14 கடைகள் உடைக்கப்பட்டபோதும் ஒருவரைக் கூட பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. 

பொலிஸார் இந்த விடயத்தில் அக்கறையற்றிருப்பதாகவே தெரிகிறது எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொறுப்புவாய்ந்தவர்கள் இந்த விடயத்தில் உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.