தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலைக்கு ஆட்களை கொண்டு சென்றவர்கள் சிக்கினர்..! 32 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

அபாய பிரதேசமாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இது குறித்து ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது ஓட்டமாவடியில் இருந்து வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலைக்கு 32 தொழிலாளர்களை பஸ்சில் ஏற்றிச் செல்வதாக 

சுகாதார தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து அதில் பயணம் செய்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு