இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் வின்சுக்கு கொரோனா!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜேம்ஸ் வின்ஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் வருகிற 14 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதில் முல்தான் சுல்தான் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் விளையாட உள்ளார். இதுவரை அவர் ஆடிய 5 போட்டிகளில் 155 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஜேம்சுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
அவருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனினும், அடுத்த பரிசோதனைக்கு அவர் செல்ல தயாராக உள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன், 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.