SuperTopAds

ரோகித்தை முந்திய தவான்!!

ஆசிரியர் - Editor III
ரோகித்தை முந்திய தவான்!!

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி தவான் 4 ஆவது இடத்திற்கு முன்னெறியுள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ஓட்டங்களை பெற்றார். 

இதன்மூலம் தவான் இந்த சீசனில் 600 ஓட்டங்களை தொட்டார். அவர் 16 ஆட்டத்தில் 603 ஓட்டங்கள் எடுத்து 2 ஆவது இடத்தில் உள்ளார்.

அவர் 68 ரன் எடுத்தால் லோகேஷ் ராகுலை முந்தி முதல் இடத்தை பிடிப்பார். இறுதிப்போட்டியில் தவான் அதை சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.