இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது !

ஆசிரியர் - Editor2
இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது !

இந்தியாவின் ஆளில்லா விமானத்தை கஸ்மீர் பகுதியில் தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் உரிமை கோரியிருக்கிறது.

பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவினுடைய ஆளில்லா உளவு விமானத்தை பிரச்சினைக் குரிய கஸ்மீர் பகுதிக்குள் பிரவேசித்த போது சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

கடந்த வருடத்திலிருந்து இதுவே நான்காவது உளவு விமானம் சுடப்பட்டிருப்பதாக அவ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.