மரணத்தின் பின்பே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..! நேற்று உயிரிழந்த இருவர் குறித்து அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்..
சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இருவருக்கு மரணத்தின் பின்பே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.
வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவருக்கும் கொழும்பு 2 ஐச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவருக்குமே இவ்வாறு இறப்பின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்தத் திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் மரணிப்பதற்கு முன்னர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த 19 வயதான இளைஞர், பிறந்தது முதலே விசேட தேவையுடையவராக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது. இதேநேரம் கொரோனா தொற்றால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்,
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.