சாஹாவின் அதிரடி: ரசீத்கானின் சுழல் மாயம்!! -டெல்லிக்கு வெள்ளையடித்த ஜதராபாத்-

ஆசிரியர் - Editor III
சாஹாவின் அதிரடி: ரசீத்கானின் சுழல் மாயம்!! -டெல்லிக்கு வெள்ளையடித்த ஜதராபாத்-

சாஹாவின் ஆதிரடி ஆட்டத்தினாலும், ரசீத் கான் வீசிய சுழல் மாய பந்துவீச்சில் திக்குமுக்காடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர், 88 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வியடைந்தனர்.

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் ச்ரேயாஸ் அய்யர் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி டேவிட் வார்னர் - விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

ரபடா வீசிய 6 ஆவது ஓவரில் வார்னர் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ஓட்டங்களை விளாசினார். இதனால் பவர் பிளேயில் டெல்லி 77 ஓட்டங்களை குவித்தது. வார்னர் 25 பந்தில் அரைசதம் அடித்தார்.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை விரட்டி அடித்து அதிரடி காட்டிய ஜதராபாத் அணி 8.4 ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டது.

10 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் வார்னர் 34 பந்தில் 66 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஸ் பாண்டு களம் இறங்கினார்.

வார்னர் ஆட்டமிழந்த பின்னர் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார். 12.5 ஓவரில் ஐதராபாத் 150 ஓட்டங்களை கடந்தது.

15 ஆவது ஓவரை நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரின் 3 ஆவது பந்தில் 45 பந்தில் 87 ஓட்டங்களை பெற்ற நிலையில் சாஹா ஆட்டமிழந்தார்.

17.3 ஓவரில் ஐதராபத் 200 ரன்னைத் தொட மணிஸ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ஓட்டங்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை குவித்தது.

சிறந்த பந்துவீச்சாளரான ரபடா விக்கெட் எதனையும் எடுக்காது 4 ஓவரில் 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

220 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடுமையான இலக்கினை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. ரகானேவும் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை கட்டுப்படுத்தினர். தவான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.  

ரகானே 26 ஓட்டங்களையும், ஹெட்மயர் 16 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 36 ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 131 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  இதன் மூலம் ஐதராபாத் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணி சார்பில் ரசீத் கான் சிறப்பாக பந்து வீசி 7 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப் சர்மா, நடராஜனாகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு