ஐபிஎல் இறுதி போட்டி எப்போது? -திகதி அறிவிக்கப்பட்டது-

ஆசிரியர் - Editor III
ஐபிஎல் இறுதி போட்டி எப்போது? -திகதி அறிவிக்கப்பட்டது-

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல் தொடர்  அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.  

இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5 ஆம் திகதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6 ஆம் திகதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3 ஆவதுமற்றும் 4 ஆவது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8 ஆம் திகதி அபுதாபியில் நடக்கும் 2 ஆவது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10 ஆம் திகதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2 ஆவது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு