போர்கால கண்ணிவெடிகள் அகற்ற உதவி வழங்கப்படும்
இலங்கை அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என கூ றியிருக்கும் ஐ.நாவின் கண்ணி வெடிகளை தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்பு தூதுவர் இளவரசர் மிரெட் ராட் செயின் அல்ஹிசைன் கண்ணிவெடிகளை அகற்ற இலங்கைக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் உதவி களை வழங்கும் எனவும் கூறியிருக்கின்றார்.
மேலும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இருகரம் கூப்பி தனது மரியாதையை வெளியிட்ட தூதுவர் அல்ஹீசைன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல்ஹீசைன் நேற்றையதினம் வட பகுதிக்கு வருகை தந்திருந்தார். இதன் போது யுத்தகாலத்தில் கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் முகாமலை பகுதிக்கு நேரடி விஐயமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கண்ணிவெடிகள் அகற்றுப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர்களுக்கு என்ன நடந்துது, எப்ப நடந்தது, இப்ப என்ன செய்கின்றீர்கள் என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கொண்ட தூதுவர் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார்.
இதே வேளை தனது விஐயத்தின் போது கண்ணிவெடிகற்றும் பகுதிகளைப் பார்iவிட்டதுடன் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி பின்னர் ஊடகங்களுக்கும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன் போது கண்ணிவெடியகற்றல் குறித்து அவர் பல்வேறு விடயங்னகளைக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதாவது இலங்கை அரசு முன்னெடுத்துள்ள கண்ணிவெடியகற்றும் செயற்பாடு என்பது மிகவும் கஷ்ரமானதொரு செயற்பாடாகும். இவ்வாறான நிலையில் இலங்கை அரசு முன்னெடுத்துள்ள நல்ல முயற்சியை வரவேற்கின்றோம்.
இந்தச் செயற்பாட்டிற்கு அதிகளிவலான ஆளணியும் தேவைப்படும் என்பதுடன் பெருமளவிலான நீதியும் தேவைப்படும். இவ்வாறான நிலையில் இலங்கை முன்னெடுத்து வருகின்ற இச் செயற்பாடு வரவேற்கத்தக்கது. இதனை விரைவாக இலங்கை அரசு முடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
இதே வேளை இலங்கை அரசின் இந்தச் செயற்பாட்டிற்கு வேறு நாடுகள் ஒத்துழைப்பு வழங்குமா என ஊடகவியியலாளர் கேள்வி எழுப்பிய போது இதற்கான உதவிகள் நிச்சயமாக வழங்கப்படுமென்றும் நம்பிக்கை வெளியிட்டார். இவ்வாறு அனைவரும் இதற்கு ஒத்துழைப்பாக இருக்கின்ற போது இந்தச் செயற்பாடு விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியுமென்றார்.
மேலும் இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இதனை விரைவாக முன்னெடுத்து முடிப்பதனூடாக அழகிய இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும் தூதுவர் ஹீசைன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.