SuperTopAds

கண்ணிவெடிகயற்றும் பணிகள் 2 வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும்

ஆசிரியர் - Editor I
கண்ணிவெடிகயற்றும் பணிகள் 2 வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும்

போர் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் 2 வருடகாலத்திற்குள் நிறைவுறுத்தப்ப டவேண்டும் எனவும் அதற்கு தேவையான சகல உதவிகளையும் தருவதாக இளவரசர் மிரெட் ராட் செயின் அல் ஹிசைன் உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைசச்ர் டீ.எம்.சுவாமிநாதன் ஊடகங்களு க்கு கருத்து கூறியிருக்கின்றார். 

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா சிறப்புத் தூதுவர் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் முகமாலைப் பகுதிக்கு நேரடி விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது கண்ணிவெடியகற்றும் பரதேசத்தைப்பார்வையிட்டதுடன் அந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது தூதுவருடன் அமைச்சர் சுவாமிநாதனும் வந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்..

யுது;த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் இலங்கையின் செயற்பாடுகள் பெருமையாக இருப்பதாக ஐ.நா தூதுவர் கூறியிருக்கின்றார். மேலும் கண்ணிவெடியகற்றும் இந்தச் செயற்பாட்டை இரண்டு வருடங்களுக்குள் அதாவது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் கூறியிரக்கின்றார்.

அதே நேரம் இலங்கையின் இந்தச் செயற்பாடுகளை தொடர்ந்தும் விரைவாக முன்னெடுப்பதற்கான சலுகைகள் மற்றும் பண ரீதியான உதவிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அவர் சென்று வந்தள்ள நாடுகளில் எங்கள் இலங்கை நாடு மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளதாகவும் கூறினார். 

ஆகவே இரண்டு வருட காலத்திற்குள் இந்தச் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த மக்களுடைய காணிகளை மக்களிடம் .மீள ஒப்படைக்க தயாராக உள்ளோம். மேலும் கண்ணவெடிகளாலும் குண்டுத் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றார்.

இதற்கமைய அவர்களுக்கான வீட்டுத் திட்ட வசதிகள் உட்பட அபிவிருத்துp நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்ற ரீதியிலான செயற்பாடகளை முன்னெடுக்க வேண்டுமென்றார். இதே வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் அங்கு நின்றிருந்த அரச அதிபரிடம் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

ஆயினும் அவ்வாறு ஒரு சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தால் அதே போன்று அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரச அதிபருக்கு இதன் போது அமைச்சர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.