மச்சாளிடம் பறித்த மாவட்ட செயலர் பதவி மச்சானிடம்..!

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவி மச்சாளிடம் இருந்து பறித்து மச்சானிற்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக தற்போது பதவி வகிக்கும் திருமதி கலாமதி - பத்மராயா உடனடியாக அந்த இடத்திற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்படுகின்றார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளர் முன்னாள் செயலாளரின் உடன் பிறந்த சகோதரியினையே திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே மச்சாளிடம் பறிக்கும் பதவி மச்சானிடமே வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம் தற்போதைய மாவட்டச் செயலாளரினதும் புதிதாக நியமிக்கப்படவுள்ள மாவட்டச் செயலாளரினது இருப்பிடங்களும் நேர் எதிர் எதிரே அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Radio