மும்பை - டெல்லி இன்று பலப்பரீட்சை!!

ஆசிரியர் - Editor II
மும்பை - டெல்லி இன்று பலப்பரீட்சை!!

அபுதாபியில் இன்று நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி அணி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், மும்பை அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்தன. இதனால் தொடர்ச்சியாக 4 ஆவது வெற்றியை நீட்டிப்பது டெல்லியா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி 6 ஆவது வெற்றியை பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி 5 ஆவது வெற்றியை அபாரமாக பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் வேட்கையில் இருக்கிறது.

இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

டெல்லி அணியில் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், பிரித்விஷா, தவான், ரி‌ஷப்பண்ட், ஸ்டோனிஸ், ரபடா, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இசான் கி‌ஷன், ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட், குயின்டன் டிகாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

Radio