வேக கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரத்தின் பெட்டி கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

வேக கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் கொக்கட்டிசோலை மணல்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய தவக்குமார் டிலஷ்ன், 19 வயதுடைய ஞானசேகரன் கிளிசஷன் என்ற இரு இளைஞர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

கொக்கட்டிச்சேலை தாந்தமலை பிரதான வீதியில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து தாந்தாமலை பகுதியை நோக்கி 

உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்தனர்.இதன் போது மணல்பிட்டி சந்திப்பகுதியில் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றிற்கு வழிவிடமுற்பட்டபோது வேகமாக சென்ற உழவு இயந்திரம் 

வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டுவிலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் இருவர் சம்பவ இடமத்தில் உயிரிழ்துள்ளதுடன் படுகாயமடைந்த மேலும் இருவரை 

மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Radio