SuperTopAds

கத்திக்குத்துக்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சி வியாபாரிகள் போராட்டம்!

ஆசிரியர் - Admin
கத்திக்குத்துக்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சி வியாபாரிகள் போராட்டம்!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை கிளிநொச்சி பொதுச் சந்தை வாயிலை மறித்து வியாபாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

“கத்திவெட்டு எம் கலாசாரத்தை சீரழிக்கும், சந்தையின் பாதுகாப்பு யார் கையில், தனிநபர் வாள்வெட்டு தமிழின சாபக்கேடு, வயிற்றுப் பசியை தீர்க்க வந்த நாம் வாள்வெட்டுக்கு இரையாவதா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் வியாபாரிகள் ஏந்தியிருந்தனர்.