SuperTopAds

இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் பின்னணியில் தீய சக்திகள்.

ஆசிரியர் - Editor I
இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் பின்னணியில் தீய சக்திகள்.

வடமாகாணத்தில் இந்து ஆலயங்கள் மீதான தாக்கு தலின் பின்னணியில் மதங்களுக்கிடையில் குழப்ப ம் உண்டாக்கவேண்டும். என நினைக்கும் தீய சக்தி களும் இருக்கின்றன என கூறியிருக்கும் வடமாகா முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், இந்த விடயம் குறித்து சகல மத தலைவர்களுடனும் பேச்சு நடத்து வேன் எனவும் கூறியுள்ளார்.

இந்து ஆலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று காலை யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ந டத்தப்பட்டிருக்கின்றது. இந்த போராட்டத்தின் நிறை வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வர னுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த மக ஜர் கையளிப்பின் பின் முதலமைச்சர் ஊடகங்களு க்கு தகவல் தருகையிலேயே மேற்கண்டவாறு கூறி யுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் கு றித்து நான் நன்றாக அறிந்துள்ளேன். இந்த பிரச்சி னை குறித்து சகல மத தலைவர்களுடனும் பேச நா ன் தீர்மானித்துள்ளேன். இதற்கமைய கிறிஸ்தவ மத ம் சார்பில் ஆயர்களுடன் பேச தீர்மானிக்கப்பட்டுள் ளது. மேலும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்க ளை நிறுத்த நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றய மதங்களை பாதிக்க கூடாது.

அந்த வகையில் இந்த விடயம் மிக மென்மையான விடயமாக உள்ளது. மேலும் வடமாகாணசபையில் இந்த விடயம் குறித்து குழு ஒன்றை உருவாக்கும்படி போராட்டத்தினை நடத்தியவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனால் உருவாக்கப்படும் குழுவுக்கு என்ன சட்டவ லு உள்ளது? என்பதை அறியவேண்டும். ஆகவே அ ந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானப்போம் என்றார்.