ஹர்த்தால் தினமான நேற்று பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்..!

ஆசிரியர் - Editor

தமிழ் மக்களின் உரிமைகளைகோரி வடகிழக்கு மாகாணங்களில் நேற்றய தினம் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்ட நிலையில் நேற்றய தினம் பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுவருவதாக பாடசாலை அதிபர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த மற்றும் சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் கேட்டறித்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ள அது தொடர்பான விபரங்களையும் பொலிஸார் கோரியுள்ளனர்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இவ்வாறு ஹர்த்தால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Radio