SuperTopAds

பெங்களூர் அணி படுதோல்வி!!

ஆசிரியர் - Editor III
பெங்களூர் அணி படுதோல்வி!!

ரி-20 ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 6 ஆவது போட்டியில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. நாணயசுழல்ச்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி,  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் ராகுலில் ஆட்டமிழக்காமல் 69 பந்தில் 132 ஓட்டங்களை எடுத்து அபார சதத்தை பரிவு செய்தார். இதனால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. 

207 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. 

முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4 ஆவது பந்தில் படிக்கல் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்காமல் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் 2 ஆவது ஓவரின 3 ஆவது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 1ஓட்டம் எடுத்த நிலையில் 3 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4 ஆவது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 ஓவரில் 53 ஓட்டம் இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து திணறியது.

பின்னர் களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே நிதினாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுந்தர் 27 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிவம் துபே 12 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள்  மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.